தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் 168 நாட்களுக்கு இலவசமாக போன் பேசும் புதிய ஆஃபரை வெளியிடுகிறது.
சிம் கார்டுகளின் வணிகத்திற்கு மத்தியில் ஜியோவின் வருகைக்குப் பிறகு ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. பல சிம் நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. ஏனெனில் ஜியோ வழங்கிய ஆஃபர் அப்படி. ஒரு வடரும் இண்டர்நெட் டேட்டா இலவசம் என்றவுடன் பெரும்பாலானோர் ஜியோவை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அந்த ஒரு வருடத்தில் மற்ற சிம் நிறுவனங்களின் டேட்டா ப்ளான்கள் படுத்துவிட்டன. இருப்பினும் ஜியோவின் தாக்கத்திலிருந்து வாடிக்கையாளர்களை மீட்டெடுக்க மற்ற சிம் நிறுவனங்களும் அதிரடி ஆஃபர்களை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் ஏர்டெல் சிம் நிறுவனம் புதிய ஆஃபர் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. ரூ.597க்கு வெளியாகும் இந்த ஆஃபர் மூலம் 168 நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் இண்டர்நெட் டேட்டா பயன்பாடு இன்றி போன் பேச முடியும். அத்துடன் நாள் ஒன்றுக்கு இலவமாக 100 குறுஞ்செய்திகள் அனுப்பமுடியும். இதுதவிர 10 ஜிபி இலவச இண்டர்நெட் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த ஆஃபரை தேசிய அளவில் செயல்படுத்தாமல், குறிப்பிட்ட சில நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே அமல்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.