நாட்டின் நேரடி வரி வசூல் சென்ற நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக 13 லட்சத்து 81 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதற்கு முந்தைய நிதியாண்டில் வசூலானதை விட இது 49 சதவிகிதம் அதிகம்.
வருமான வரி மற்றும் நிறுவன வரியை உள்ளடக்கிய நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளதற்கு அடிப்படை கடன் வட்டி விகிதம் குறைவாக நீடிப்பதே காரணமாகக் கூறப்படுகிறது. 2021-22ஆம் நிதியாண்டின் வரி வசூல் கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாக உள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூல் 9 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயாகவும், 2019-20ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூல் 10 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாயாகவும், 2018-19ஆம் நிதியாண்டில் 11 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாயாகவும் இருந்தது.
இதையும் படிக்க: பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு