வணிகம்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு... இந்த வாரம் வெளியாகும் கல்யாண் ஜூவல்லர்ஸ் உள்பட 5 ஐபிஓ-கள்!

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு... இந்த வாரம் வெளியாகும் கல்யாண் ஜூவல்லர்ஸ் உள்பட 5 ஐபிஓ-கள்!

webteam

கடந்த சில மாதங்களாகவே அதிகளவுக்கு ஐபிஓ-கள் பங்குச்சந்தையில் பட்டியலானது. இந்த நிலையில், இந்த வாரம் மட்டும் ஐந்து ஐபிஓ-கள் பங்குச்சந்தையில் வெளியாகின்றன. இந்த ஐந்து நிறுவனங்களும் ரூ.3,964 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளன.

கிராப்ட்மேன் ஆட்டோமேஷன், லஷ்மி ஆர்கானிக்ஸ், சூர்யோதய் ஸ்மால்பேங்க், நசரா டெக்னாலஜீஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களின் ஐபிஓ இந்த வாரம் வெளியாக இருக்கிறது.

> கிராப்ட்மேன் ஆட்டோமேஷன் - ரூ.824 கோடி (மார்ச் 15 முதல் மார்ச் 17 வரை)

> லஷ்மி ஆர்கானிக்ஸ் - ரூ.600 கோடி (மார்ச் 15 முதல் மார்ச் 17 வரை)

> கல்யாண் ஜூவல்லர்ஸ் - ரூ.1,175 கோடி (மார்ச் 16 முதல் மார்ச் 18 வரை)

> நசரா டெக்னாலஜீஸ் - ரூ.582 கோடி (மார்ச் 17 முதல் மார்ச் 19 வரை)

சூர்யோதய் ஸ்மால்பேங்க் ரூ.582 கோடி (மார்ச் 17 முதல் மார்ச் 19 வரை)

ஆகிய ஐந்து நிறுவனங்கள் மேற்கண்ட தொகையை திரட்ட இருக்கின்றன.

ஜனவரி மாதம் நான்கு நிறுவனங்களின் ஐபிஓ வெளியானது. பிப்ரவரி மாதமும் நான்கு நிறுவனங்களின் ஐபிஒ வெளியானது. ஆனால் மார்ச் மாதம் இதுவரையில் 8 ஐபிஓகள் (தற்போதைய ஐந்து ஐபிஒகளையும் சேர்த்து) வெளியாகி இருக்கின்றன.

பங்குச்சந்தையில் சாதகமான சூழல் இருப்பதால், மேலும் பல நிறுவனங்களின் ஐபிஓ-கள் வெளியாக இருக்கின்றன. பல நிறுவனங்கள் செபியிடம் அனுமதியை பெற்றிருக்கின்றன. தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் ஐபிஓகள் கூட நடப்பாண்டில் வெளியாக இருக்கின்றன.

ஒரு ஐபிஓ-வுக்காக பல முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கின்றன. ஆனால், குலுக்கல் முறையில் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதால், பட்டியலிடும் முதல் நாளில் சில பங்குகள் கணிசமாக உயர்கின்றன. ஆனால், அனைத்து முறையும் உயரும் என்று சொல்ல முடியாது. பட்டியலாகும் முதல் நாளில் கிடைக்கும் லாபத்துக்காக மட்டும் ஐபிஓகளில் முதலீடு செய்யக் கூடாது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.