செஞ்சியில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திற்ந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் 24 கடைகள் கொண்ட புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை திறந்து வைத்து பார்வையிட்டார் பின்னர், காய்கறிகள் கொள்முதல் செய்தார். பின் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் 40 விவசாயிகளுக்கு 7 லட்சம் மதிப்பிலான விவசாய இடுபொருள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேளாண்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.