விவசாயம்

மருத்துவ குணமிக்க மூங்கிலரிசி - சேகரிப்பில் ஆர்வம் காட்டும் நீலகிரி பழங்குடியினர்

மருத்துவ குணமிக்க மூங்கிலரிசி - சேகரிப்பில் ஆர்வம் காட்டும் நீலகிரி பழங்குடியினர்

Rasus

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மூங்கில் அரிசி சேகரிப்பில் பழங்குடியினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 50 சதவிகித மூங்கில் செடிகளின் ஆயுட்காலம் முடிந்துள்ள நிலையில் அவை பூத்துள்ளன. தற்போது மூங்கில் செடிகளிலிருந்து மூங்கில் அரிசி கொட்டத் தொடங்கியிருக்கிறது. மருத்துவ குணமிக்க மூங்கில் அரிசிக்கு தேவை அதிகளவில் இருப்பதால் அவற்றை சேகரிக்க பழங்குடியின மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் கொட்டிக் கிடக்கும் மூங்கிலரிசியை பழங்குடியின பெண்கள் ஆர்வத்துடன் சேகரித்து வருகிறார்கள். ஒரு கிலோ மூங்கில் அரிசிக்கு 500 ரூபாய் வரை கிடைப்பதால் நல்ல வருமானத்தையும் அவர்கள் ஈட்டி வருகிறார்கள்.