கோயம்பேடு மார்க்கெட் புதியதலைமுறை
விவசாயம்

வரத்து குறைவால் கோயம்பேட்டில் விண்ணைத் தொட்ட தக்காளி விலை.. கிலோ ரூ.70-ஐ தாண்டி விற்பனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலையானது கடந்த 2 வாரத்திற்கு முன்பு ரூ.30க்கும் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.70க்கும் விற்கப்பட்டது.

PT WEB

சென்னையில் தக்காளி விலை இரண்டுமடங்காக அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்..

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலையானது கடந்த 2 வாரத்திற்கு முன்பு ரூ.30க்கும் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.70க்கும் விற்கப்பட்டது.

அனால் தற்பொழுது சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலையானது இரண்டு மடங்காக உயர்ந்து , 2 வாரத்திற்கு முன்பு ரூ.30க்கு விற்கப்பட்ட 1 கிலோ தக்காளி ரூ.60ஆக விற்பனையாகிறது

இந்த விலை உயர்வுக்கு காரணம் ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து கோயம்பேடுக்கு தக்காளி வரத்தானது குறைந்து வருகிறது.பொதுவாக கோயம்பேடுக்கு நாள் ஒன்றிற்கு 60 லாரிகளில் தக்காளியின் வரத்து இருக்கும். ஆனால் தற்பொழுது 40 லாரிகளில் மட்டுமே தக்காளியின் வரத்து இருக்கிறது. மழை, விளைச்சல் பாதிப்பு காரணமாக தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

மேலும் தக்காளியின் விலையானது குறைவதற்கு குறைந்தது 20 நாட்களாவது ஆகும் என்று தெரியவந்துள்ளது.மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகத்தில் தக்காளியின் விலை குறைவுதான் என்றும் கூறப்படுகிறது.