விவசாயம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை - மத்திய அரசு

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை - மத்திய அரசு

PT WEB

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் எழுத்து மூலம் இவ்வாறு பதிலளித்தார்.

அதே சமயம், 3 லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால பயிர்கடன்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது, பிணை இல்லாமல் வழங்கப்படும் விவசாயக்கடன்களின் உச்சவரம்பை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 1,60,000  ரூபாயாக உயர்த்தியது, என விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எண்ணற்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.