விவசாயம்

விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் பதிவுசெய்ய வேண்டும்: ஆட்சியர் ரோகிணி

விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் பதிவுசெய்ய வேண்டும்: ஆட்சியர் ரோகிணி

webteam

சேலம் மாவட்ட விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி வலியுறுத்தியுள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோணகபாடி கிராமத்தில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சி தலைவர் ரோகிணி கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கினார். அப்போது, டெங்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் பொதுமக்கள் விழிப்புடன் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 221 பேருக்கு 24 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக பெய்ந்துள்ளது. இதில் விவசாயிகளின் விளைநிலங்கள் லட்சக்கணக்கான ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் விவாசயிகளின் நலன் குறித்து பேசிய ஆட்சியர் ரோகிணி, விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவுசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.