விவசாயம்

விவசாயக் கடன் ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு

Rasus

விவசாயக் கடனாக ரூ. 10 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

அவர் தனது பட்ஜெட்டில் உரையில், விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வரும் நிதியாண்டில் விவசாயம் 4.1% ஆக வளர்ச்சி அடையும் என குறிப்பிட்ட அவர், பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.. கடந்த ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.5,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

விவசாயிகளின் வருமானத்தை அடுத்த 5 ஆண்டில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த நிதியமைச்சர், சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க ஏதுவாக குளிர்பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும் எனவும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.