விவசாயம்

”கடலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்குங்கள்” - கண்ணீர் வடிக்கும் திருப்பூர் விவசாயிகள்

”கடலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்குங்கள்” - கண்ணீர் வடிக்கும் திருப்பூர் விவசாயிகள்

webteam

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடலைக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை வழங்குமாறு  கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குள்ளாய்பாளையம் பகுதியில் சுமார் 50 ஏக்கரில் கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தமிழக அரசிடம் கடலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து விவசாய பெண்மணி கூறும்போது, “ நிலக்கடலை பயிரிட ஒரு ஏக்கருக்கு 60,000 ஆயிரம் ரூபாய் வரை செலவிடுகிறோம். ஆனால், கடலையை விற்றால் கிடைக்கும் பணமானது, கூலி ஆட்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு கூட வருவதில்லை.

ஆகையால் தமிழகஅரசு கடலை பயிருக்கு உரிய விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் வடித்தார்.