விவசாயம்

”கரும்பு டன் ஒன்றுக்கு ரூ4,500 வழங்க வேண்டும்”-சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

”கரும்பு டன் ஒன்றுக்கு ரூ4,500 வழங்க வேண்டும்”-சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

PT

”கரும்பு டன் ஒன்றுக்கு 4,500 ரூபாய் வழங்க வேண்டும்” உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

’வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (ஜனவரி 10) உண்னாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.

இந்தப் போராட்டத்தில், "நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாய் வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு 4,500 ரூபாய் வழங்க வேண்டும், வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். கோயில் அறக்கட்டளை குத்தகை விவசாயிகள், குடிமை குடிமனை உரிமையாளர்கள் உரிமையை உறுதிப்படுத்துதல்" எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.