விவசாயம்

பூத்து சிரிக்கும் செவ்வந்திப் பூ: சிரிக்காத விவசாயிகள்..

பூத்து சிரிக்கும் செவ்வந்திப் பூ: சிரிக்காத விவசாயிகள்..

webteam

நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வந்திப் பூக்களின் விளைச்சல் அதிகரித்தும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வருந்துகின்றனர். 

நாகை மாவட்டத்தின் பால்பண்ணைச்சேரி, நாகூர், பொய்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செவ்வந்திப்பூ சாகுபடி‌ செய்யப்பட்டுள்ளன. தற்போது செவ்வந்திச் செடிகளில் பூக்கள் பூத்து குலுங்கும் நிலையில், ஒரு கிலோ 20 ரூபாய் வரையே விற்பதால் பூக்களைப் பறிக்கும் கூலிக்குக் கூட கட்டுப்படியாகவில்லை என விவசாயிகள் வருந்துகின்றனர். 

அதுமட்டுமின்றி நெல், கரும்பு உள்ளிட்டவைகளுக்கு காப்பீட்டு திட்டம் வழங்குவதுபோல், பூக்கள் சாகுபடிக்கும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். இல்லையென்றால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.