விவசாயம்

டவ்-தே புயல்: கோடையில் முதன்முறையாக 130 அடியை கடந்த முல்லைப் பெரியாறு!

டவ்-தே புயல்: கோடையில் முதன்முறையாக 130 அடியை கடந்த முல்லைப் பெரியாறு!

sharpana

கோடைக்காலத்தில் முதன்முறையாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியை கடந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

டவ் - தே புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர் வரத்து அதிகரித்து கோடைகாலத்தில் முதன்முறையாக முல்லைப்பெரியாறு அணை 130 அடியை எட்டியுள்ளது.

அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 302 கன அடியாக உள்ளதால், தமிழகத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 500 கன அடியிலிருந்து 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை முல்லைப்பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என இருமாநில விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.