விவசாயம்

மலை நெல்லிக்காய்: விளைச்சல் அதிகரித்து விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

kaleelrahman

போடி மலைபகுதியில் சாகுபடி செய்யப்படும் மலை நெல்லிக்காய் விளைச்சல் அதிகரித்து விலை கனிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடி ஒன்றியத்தில் உள்ள பெரியாத்துகோம்பை, வலசத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மலை நெல்லிக்காயை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில், என்.ஏ 7 காஞ்சன், கிருஸ்ணா, சக்காய போன்ற நெல்லிக்காய் ரகங்கள் இப்பகுதியில் விளைவிக்கப்படுகிறது. 24 மாதங்களில் பலன் தரக்கூடிய நெல்லிக்காய் விவசாயத்தில் ஆண்டுக்கு 3 முறை வருமானம் பெறலாம்.

மருத்துவ குணம் நிறைந்த மலை நெல்லிக்கு உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது மலை நெல்லியின் விளைச்சல் அதிகரித்து விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் நெல்லி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.