விவசாயம்

கொடைக்கானல்: அழியும் நிலையில் உள்ள ஆப்பிள் மரங்கள் - மீட்டெடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல்: அழியும் நிலையில் உள்ள ஆப்பிள் மரங்கள் - மீட்டெடுக்க பொதுமக்கள் கோரிக்கை

kaleelrahman

முற்றிலும் அழியும் நிலையில் உள்ள கொடைக்கானல் ஆப்பிள் மரங்களை மீட்டெடுக்க அப்பகுதி மக்கள் தோட்டக்கலைத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் மற்றும் வான் இயற்பியல் மைய பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்களுடன் தோப்புகள் இருந்துள்ளன. அத்தகைய சூழல் தற்போது முற்றிலும் மாறி விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஆப்பிள் மரங்கள் சுருங்கி விட்டதாக கொடைக்கானல் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கட்டிடங்களின் பெருக்கத்தால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாற்றம், அன்னிய மரங்களால் குளிர்ச்சி குறைந்தது என பல்வேறு காரணங்களால் பிரபலமாக இருந்த கொடை ஆப்பிள் அழிவின் விளிம்பில் உள்ளதாக கவலை கூறும் மக்கள் ஆப்பிள் மரங்களை மீட்டெடுக்க தோட்டக்கலைத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.