கர்நாடக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, 10 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால், ஒகேனக்கல் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. செப்டம்பர் மாதத்திற்கு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதால், நீர்திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனைப்படிக்க...கோவை: ரயிலுக்கு அடியில் படுத்திருந்த போதை நபரால் துடியலூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு