விவசாயம்

உரங்கள் விலை உயர்வை தவிர்க்க மானியம் அதிகரிப்பு

உரங்கள் விலை உயர்வை தவிர்க்க மானியம் அதிகரிப்பு

Sinekadhara

மத்திய உரத்துறை பரிந்துரைப்படி, கரீஃப் பருவத்தில் (01.04.2022 முதல் 30.09.2022 வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் அதிகரித்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கரீஃப் 2022 பருவத்தில் உள்நாட்டு உரங்களுக்கு ஆதரவு அளிப்பது உட்பட ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியமாக ரூ.60,939.23 கோடியை போக்குவரத்து மானியம் வாயிலாகவும், உள்நாட்டு உற்பத்திக்கு கூடுதல் ஆதரவு மற்றும் டிஏபி இறக்குமதி வாயிலாகவும் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் ஒரு மூட்டை டிஏபி உரத்திற்கு தற்போது வழங்கப்படும் மானியத்தை ரூ.1,650-ஐ ரூ.2,501-ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மானியத்தை விட 50% அதிகமாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார்.