விவசாயம்

மழையில் அழிந்த பயிர்களுக்கு காப்பீட்டு தொகை தேவை: பி.ஆர்.பாண்டியன்

மழையில் அழிந்த பயிர்களுக்கு காப்பீட்டு தொகை தேவை: பி.ஆர்.பாண்டியன்

Veeramani

மழையில் அழிந்த சம்பா பயிர்களுக்கான காப்பீட்டு தொகையை உடனடியாக பெற்றுத் தர தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஜனவரி மாதம் பருவம் மாறி பெய்த பெரு மழையால் பெரும்பாலான மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் முற்றிலும் அழிந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கான இழப்பீட்டை தருவது பற்றி காப்பீட்டு நிறுவனங்கள் எதுவும் கூறவில்லை என்றும் அந்நிறுவனங்களிடம் பேசி இழப்பீட்டை முதல்வர் பெற்றுத்தர வேண்டும் என்றும் பி.ஆர்.பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

மேலும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் பி.ஆர்.பாண்டியன் கேட்டுக்கொண்டார்.