விவசாயம்

நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்காததால் முளைக்கும் நெல்மணிகள்: டெல்டா விவசாயிகள் வேதனை

நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்காததால் முளைக்கும் நெல்மணிகள்: டெல்டா விவசாயிகள் வேதனை

Veeramani

திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில்,நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கொட்டப்பட்டுள்ள நெல் மணிகள் மழையில் நனைந்து முளைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா  மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக, பல இலட்சம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில்,  தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, நேரடி கொள்முதல் நிலையத்திற்கு வெளியே விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர். ஆனால், மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததால், தற்போது நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  

ஏற்கனவே  தொடர் மழை காரணமாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதால், உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் விவசாயிகள், ஈரப்பதத்தை கணக்கிடாமல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர். இதே போல, திருவாரூர் மாவட்டம் மாவட்டம் மன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.