விவசாயம்

திராட்சையை நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலை

திராட்சையை நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலை

webteam

தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கருப்பு திராட்சையில் நோய்த்தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கூடலூர், காமயகவுண்டன்பட்‌டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பன்னீர் திராட்சையில், செவ்வட்டை, சாம்பல் உள்ளிட்ட நோய்கள் தாக்கியுள்ளதால், விற்பனை செய்யமுடியாமல் கிடங்கிலேயே தேக்கி வைக்‌கும் நிலை இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, பன்னீர் திராட்சையை ராயப்பன்பட்டி பகுதியிலுள்ள ஒயின் த‌யாரிக்கும் தொழிற்சாலைக்கு மலிவு விலையில் கொடுப்பதாக் கூறுகின்றனர்.