விவசாயம்

முள்ளியாறு பாசன கிளை வாய்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

முள்ளியாறு பாசன கிளை வாய்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

EllusamyKarthik

கல்லணையில் இன்று பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர், வேதாரண்யம் கடைமடை பகுதி வரை தடையின்றி வருவதற்கு, முள்ளியாறு பாசன கிளை வாய்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா காவிரி டெல்டாவின் கடைமடைப் பாசனப் பகுதியாகும். மூலக்கரை, பிராந்தியங்கரை, தாணிக்கோட்டகம், தகட்டூர், தலைஞாயிறு உள்ளிட்ட 15க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர். 

ஆனால், முள்ளியாறு மற்றும் பாசன கிளை வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் முடிவடையாததால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவது தடைபட்டு, குறுவை சாகுபடி பணிகள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இன்று கல்லணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர், கடைமடை பகுதிக்கு வந்துசேர 15 நாட்களுக்கு மேலாகும் நிலையில், அதற்குள் வாய்க்கால்களை முறையாகத் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோருகின்றனர்.