விவசாயம்

ஈரோடு: விளைச்சல் குறைவு; விலை அதிகம்- செண்டு மல்லி பூ விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு: விளைச்சல் குறைவு; விலை அதிகம்- செண்டு மல்லி பூ விவசாயிகள் மகிழ்ச்சி

kaleelrahman

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் செண்டுமல்லி பூ ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செண்டு மல்லி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருவதால் செண்டு மல்லி பூக்கள் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக இன்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு செண்டு மல்லி பூக்கள் வரத்து வெகுவாக குறைந்தது.

வரத்து குறைவால் செண்டு மல்லி பூக்களுக்கு தேவை அதிகரிப்பின் காரணமாக இன்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் செண்டுமல்லி ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையானது. கடந்த சில தினங்களாக செண்டு மல்லி பூ கிலோ 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை மட்டுமே விற்பனையான நிலையில் இன்று பூக்கள் வரத்து குறைவால் செண்டு மல்லி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்றதால், செண்டு மல்லி பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.