விவசாயம்

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை துறை இயக்குனர் ஆய்வு

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை துறை இயக்குனர் ஆய்வு

kaleelrahman

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை நேரில் ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்த பயிர்களை பாதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து புதிய தலைமுறையின் செய்தி வெளியானது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணர் ஆகியோர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்கள்

ஆய்வின் போது வேளாண்மை துறை இயக்குனர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன்...

திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை தற்போது ஆய்வு செய்து வருகிறோம். மேலும் ஒவ்வொரு ஊரிலும் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பாதிக்கப்பட்ட இடங்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் பேசும்போது... புரட்டாசி மாதத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. வடிகால்கள் தூர்வாரப்பட்டதால் ஓரளவிற்கு தண்ணீர் வடிந்துள்ளது. மேலும்; சரி செய்யப்படாத வடிகால்கள் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்படும் என்றார்.