சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான கடலூர் வீராணம் ஏரி நிரம்பியதையடுத்து விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஏரியின் முழு கொள்ளளவான 47 புள்ளி 5 அடியில், 47 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. மேலும் அணைக்கு 500 கனஅடி நீர் வந்துகெண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி, அப்படியே நீர் முழுவதுமாக புதிய மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. இதில் சென்னை குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 48 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரி நிரம்பியதால் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 44 ஆயிரத்து 800 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.