விவசாயம்

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பயிர்கள் பாதிப்பு

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பயிர்கள் பாதிப்பு

Sinekadhara

கடலூரில் தென்பெண்ணை ஆற்றின் நடுவே பராமரிக்கப்பட்ட மரங்களால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கடலூரில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சிலர் தென்பெண்ணை ஆற்றின் நடுவே மரங்கள் வளர்த்து விவசாயம் செய்தது வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பயிர்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மரங்கள் அடைத்ததால் தண்ணீர் செல்லமுடியாமல் ஆற்றின் கரையோரம் இருந்த குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.