ஹரியானா விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து ஹரியானா மாநில அரசாங்கத்தை விமர்சித்த பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யு) தலைவர் ராகேஷ் டிக்கைட், "அரசு நடத்தும் தலிபான்களால் நாடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மாநில பாஜக தலைவர் ஓம் பிரகாஷ் தங்கர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஹரியானாவில் விவசாயிகள் கர்னல் பகுதியை நோக்கிச் சென்றபோது, நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விவசாயிகள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக மாநிலத்தில் பல சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள் உட்பட பல்வேறு இடங்களில் விவசாயிகள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பேசிய பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யு) தலைவர் ராகேஷ் டிக்கைட்," அரசு நடத்தும் தலிபான்களால் நாடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது . விவசாயிகளின் தலையை உடைக்க கட்டளையிட்ட தளபதி இருக்கிறார். போலீஸ் படை மூலம், அவர்கள் முழு நாட்டையும் கைப்பற்ற விரும்புகிறார்கள்" என்று கூறினார்.