விவசாயம்

விவசாயிகளுக்காக விரைவில் அறிமுகமாகும் தானியங்கி டிராக்டர்கள்

webteam

விவசாயிகளுக்காக விரைவில் அறிமுகமாகும் தானியங்கி டிராக்டர்கள்

போதிய வேலையாட்கள் கிடைக்காமல் சிரமப்படும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தானியங்கி டிராக்டர்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

விவசாய தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் சூழலில், விரைவில் தானியங்கி டிராக்டர்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. விவசாயிகளுக்கு உதவும் வகையில் மஹிந்திரா நிறுவனம் இரண்டு வகையான புதிய டிராக்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலாவது தயாரிக்கப்பட்டுள்ள டிராக்டர் ஓட்டுநர் ஸ்டீரிங்கை இயக்க தேவையற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயி பிற பணிகளில் கவனம் செலுத்தமுடியும்.

இதற்கு அடுத்த கட்டமாக முழுவதுமாக தானாக ஓட்டுநர் இல்லாமல் செயல்படக்கூடிய டிராக்டர்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை இயக்க ஓட்டுநரே தேவையில்லை. ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த டிராக்டரை விவசாயி தமது போன் மூலமே கட்டுப்படுத்த முடியும். இந்த புதிய தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு முதல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.