விவசாயம்

மரங்களை பிடுங்கி எறிந்த அதிகாரிகள் : மீட்டு மறு உயிர் கொடுத்த சமூக ஆர்வலர்கள்

மரங்களை பிடுங்கி எறிந்த அதிகாரிகள் : மீட்டு மறு உயிர் கொடுத்த சமூக ஆர்வலர்கள்

webteam

தேனியில் சாலை விரிவாக்க பணிக்காக வெட்டி சாய்க்கப்பட்ட மரங்களுக்கு மறு உயிர் கொடுத்த சமூக ஆர்வலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி என்றாலே மரங்கள் அடங்கிய பசுஞ்சோலை என்பது நாம் அறிந்தது. ஆனால் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அங்கு நீண்டகாலமாக இருந்து வந்த மரங்கள் தற்போது வேரோடு பிடிங்கி எறியப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக இயற்கை ஆர்வலர்கள் பலரும் பல கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

இதற்கு மாற்றாக அங்கிருக்கும் சமூக ஆர்வலர்கள், புதிய மரங்களை நட்டும், அதனை பராமரித்தும் வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாரிகள் சிலர் சாலை விரிவாக்கப் பபணிகளுக்காக அப்பகுதியில் இருந்த பல மரங்களை பிடுங்கி அப்புறப்படுத்தியுள்ளனர். இதனை பார்த்து வேதனையடைந்த சமூக ஆர்வலர்கள் சிலர் அந்த மரங்களை மீட்டு அதனை வேறு பகுதியில் நட்டனர்.

அதில் சில மரங்களை அருகில் நட முடியாததால் அதனை வாகனத்தில் ஏற்றி தேனி புறவழிச் சாலை அருகே கொண்டு நட்டனர். சமூக ஆர்வலர்களின் இந்தச் செயல் அனைவரின் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.