விவசாயம்

ஆந்திரா: கிருஷ்ணாபுரம் நீர்தேக்கத்திலிருந்து 1,200 கனஅடி நீர் திறப்பு

ஆந்திரா: கிருஷ்ணாபுரம் நீர்தேக்கத்திலிருந்து 1,200 கனஅடி நீர் திறப்பு

Veeramani

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணாபுரம் நீர்தேக்கத்திலிருந்து 1,200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணாபுரம் நீர்தேக்கத்திலிருந்து திறந்துவிடப்பட்ட நீர், திருவள்ளூரில் தரைப்பாலத்தை அடித்துச் சென்றதால் பத்து கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணாபுரம் நீர்தேக்கத்திலிருந்து ஆயிரத்து 200 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பள்ளிப்பட்டு பகுதியை சுற்றியுள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளியகரம், சொரக்காபேட்டை, நெடியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களுக்கு மேல் தண்ணீர் செல்வதால் பாலத்தை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சாமந்தவாடா தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக 20 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.