விவசாயம்

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் கிடைக்காததால் விவசாயப் பணிகள் பாதிப்பு!

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் கிடைக்காததால் விவசாயப் பணிகள் பாதிப்பு!

sharpana

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன்கள் வழங்கப்படாததால், சாகுபடி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் தொழில்கள் முடங்கிக் கிடந்த போதிலும், விவசாயத்துறை மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்குக் கை கொடுத்து வருகிறது. கொரோனா பரவல் அச்சத்திலும், ஊருக்கே உணவளிப்பதற்காக, விளை நிலத்தில் இறங்கி தங்களது அன்றாடப் பணிகளை செய்து வரும் விவசாயிகள் தற்போது பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் 160 கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ள நிலையில், புதிதாக பயிர்க்கடனை வழங்க மறுப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் பயிர்கடன்களை தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்ட பின்னர், கூட்டுறவு கடன் சங்கத்தில், புதிதாக கடன் தருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தற்போது விவசாயப் பணிகளை செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.