விவசாயிகள் தற்கொலைகள் குறித்து அரசாங்கத்திடம் எந்தத் தகவலும் இல்லை, என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
“பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேசிய குற்ற ஆவண பதிவு ஆணையத்திற்கு (என்.சி.ஆர்.பி) புள்ளிவிவரங்களை சமர்ப்பிக்காததால், கடந்த ஆண்டின் விவசாயிகள் தற்கொலை குறித்த தரவு எதுவும் இல்லை. மேலும் விவசாயத் துறையில் தற்கொலைக்கான காரணங்கள் குறித்த தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களால் அவை தனித்தனியாக வெளியிடப்படவில்லை" என்று மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் தெரிவித்தார்.
கடந்த வாரம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில், நாடெங்கிலும் கொரோனா பொதுமுடக்கத்தின்போது உயிர் இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறியதனால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை உருவானது.
தற்செயலான இறப்புகள் மற்றும் தற்கொலைகள் குறித்த தேசிய குற்ற ஆவண பதிவேட்டின் தரவுகளின்படி, 2019-ல் 10,281 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர், இந்த எண்ணிக்கை 2018 இல் 10,357 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.