பெண் மாடல் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஜிம்பாப்வே அதிபர் மனைவி கிரேஸ் முகாபே, தங்களது நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முடியாதபடி தென்னாப்பிரிக்க அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் ஹோட்டலில், கேப்ரியல்லா ஏங்கெல்ல் என்ற பெண் மாடலை மின்கம்பியால் தாக்கியதாக கிரேஸ் முகாபே மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவரிடம் காவல்துறையிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால், ஒப்புக் கொண்டபடி அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை.
இதையடுத்து, அவர் தென் ஆப்பிரிக்காவை விட்டு தப்பிச் செல்ல முடியாதபடி விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டிருக்கின்றன. கிரேஸ் முகாபேயின் கணவரும், ஜிம்பாப்வேயின் அதிபருமான ராபர்ட் முகாபே, பிராந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருக்கிறார். அவருடன் அவரது மனைவியும் அங்கு சென்றிருந்தார்.