``நடந்துகொண்டிருப்பது போர் இல்லை, பயங்கராவதம்”- புடினை கடுமையாக சாடிய செலன்ஸ்கி

``நடந்துகொண்டிருப்பது போர் இல்லை, பயங்கராவதம்”- புடினை கடுமையாக சாடிய செலன்ஸ்கி
``நடந்துகொண்டிருப்பது போர் இல்லை, பயங்கராவதம்”- புடினை கடுமையாக சாடிய செலன்ஸ்கி
Published on

போரை நிறுத்தவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால், 3-ம் உலக போரை தவிர்க்க முடியாது என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 26-வது நாளாக தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக மரியுபோல் நகர் முற்றிலும் சேதம் அடைந்து காட்சி அளிக்கிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பேசியுள்ளார். தனது பேட்டியில் அவர், “உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் என்பது போர் அல்ல; பயங்கரவாதம். நாங்கள் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பயங்கவரவாதத்தை நிறுத்த தயார்தான்” என்றுக்கூறி, மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் செலன்ஸ்கி.

பின்னர் பேசுகையில், “புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால், இது 3-ம் உலக போருக்கு வழி வகுக்கும்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com