ஆப்ரிக்காவில் ஜாம்பியா (Zambia) நாட்டில் கசங்கா என்ற தேசிய பூங்கா ஒன்றில், வருடம்தோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆப்பிரிக்க மெகாபாட் இன வௌவால்கள் ஒரே இடத்தில் குவியும்.
வௌவால்கள் எதிர்மறையான செயல்பாட்டிற்கும், துர்சக்தியின் அடையாளமாகவும், சாத்தான்களின் இருப்பிடமாகவும் சிலரால் வர்ணிக்கப்படுகிறது. காரணம் அவை ஆள்ளில்லா குகைகளிலும், அடர்ந்த மரங்களிலும் தனது இருப்பிடமாகக்கொண்டு வாழ்ந்து வருகிறது. தலைகீழாக தொங்கக்கூடிய ஒருவகை பாலூட்டி இனமான இதன் எடை சுமார் 300 கிராம் வரையில்தான் இருக்கும். கண் தெரியாது என்பதால், ஒலியின் சக்தியைக்கொண்டு இறையைதேடி செல்லும்.
வௌவால்களில் பல இனங்கள் இருக்கும் நிலையில், அதில் குறிப்பிட்ட ஒருவகைதான், ‘ஆப்பிரிக்க மெகாபாட்’ இன வௌவால்கள். இத்தகைய வௌவால்கள் வருடம் தோறும் ஜாம்பியா நாட்டில் ஒன்றுகூடுவதால் இவற்றை பார்ப்பதற்காக பல பறவைகள் ஆர்வலர்கள் ஜாம்பியா நாட்டிற்கு செல்வார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜோஷ் ஹிகின்சன் என்ற ஆர்வலர்.
இவர் அந்த வௌவால்களை வீடியோ எடுப்பதற்காக ஒரு மரத்தின் மேல் 3 வாரங்கள் தங்கி அவற்றை படம் பிடித்து தனது வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இவர் எடுத்த இந்த வீடியோ, ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.