தூங்கினால் மரணம்: 18 ஆண்டுகள் நரக வேதனை அனுபவிக்கும் இளைஞர்
தூங்கினால் மரணமடையும் வினோத நோயால் இளைஞர் பாதிக்கப்பட்டு 18 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார்.
இங்கிலாந்தின் சதர்ன் ஹெமிஸ்பயர் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் லியாம் டெர்பிஷையர். பிறக்கும் போது இவரது உடல்நிலையை ஆய்வு செய்த, மருத்துவர்கள், சிசிஹெச்எஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்று தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் 1500 பேரை மட்டுமே தாக்கியுள்ள இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை அவர்கள் தூங்குவதை மறந்துவிடும் என்றும் இதனால் இதயம், நுரையீரல் செயல் இழந்து நோயாளி இறக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். லியாம் பிறந்ததில் இருந்து ஜி.எம்.எஸ். என்ற கருவி மூலம் பெற்றோர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மற்ற மாணவர்கள் போல் பள்ளிகளுக்கு செல்லும் லியாம், தூக்கம் வரும்போது மட்டும் பெற்றோரின் கண்காணிப்புடன் செயற்கை சுவாசம் மூலம் தூங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.