அமெரிக்காவின் டெக்சாஸ் நகர மேயராக 7 மாத குழந்தை பதவியேற்ற சுவாரஸ்யம் நிகழ்ந்துள்ளது.
டெக்சாஸில் உள்ள வைட் ஹால் நகரின் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்ட ஆண்டுதோறும் கவுரவ மேயர் பதவி ஏலம் விடப்படும். இந்த மாதத்திற்கான ஏலத்தில் 7 மாத குழந்தையான வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து கவுரவ மேயராக 7 மாத குழந்தையான சார்லஸ் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பதவியேற்கும் விழாவில் சார்லஸ் மெக்மில்லன் மேயராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற மேயரை கையில் தூக்கி கொஞ்சுவதற்கு அங்கிருந்தவர்கள் ஆர்வமாக இருந்தனர்.
பதவியேற்புக்குப் பின் சார்லஸின் வளர்ப்புத் தாயிடம் மேயர் குடியரசு கட்சி ஆதரவாளரா? அல்லது ஜனநாயக கட்சி ஆதரவாளரா? என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தாய் நான்சி, மேயர் சார்லஸ் அனைவரையும் நேசிப்பார். அனைவரின் ஒற்றுமைக்காகவும் உழைப்பார். அமெரிக்காவை மீண்டும் கனிவான நாடாக உருவாக்குவதே அவரின் அரசியல் நோக்கம் என தெரிவித்தார்.