அமீரகம் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் முயற்சி

அமீரகம் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் முயற்சி
அமீரகம் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் முயற்சி
Published on

ஏமனிலிருந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணையை ஐக்கிய அரபு அமீரக படையினர் இடைமறித்து அழித்து அசம்பாவிதத்தை தவிர்த்தனர்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது இரு வாரங்களுக்கு முன் ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் இறந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த வாரமும் அமீரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் முற்பட்டனர். எனினும் இதை அமீரக படையினர் இடையிலேயே தடுத்து நிறுத்தி அழித்தனர்.

இந்நிலையில் 3ஆவது முறையாக மீண்டும் ஏவுகணை தாக்குதல் முயற்சி நடந்துள்ளது. இம்முறையும் ஏவுகணை இடைமறித்து தடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மக்கள் வசிக்காத பகுதியில் ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததாகவும் இதனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமீரகத்திற்கு இஸ்ரேல் அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இத்தாக்குதல் முயற்சி மிகுந்த கவனம் பெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com