சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு பொதுநிகழ்வில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது மிகத் தீவிரமாக இருமியதால், அவரது உடல்நிலை பற்றிய சந்தேகம் வலுத்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், ஷென்ஷெனில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி சார்பான ஒரு நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவருக்கு மிகத்தீவிரமான இருமல் ஏற்பட்டது. இது அவரது உடல்நிலை குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது. உரையின் இடையே அடிக்கடி ஏற்பட்ட இருமல் காரணமாக ஒவ்வொரு முறையும் அவர் பேசுவதை நிறுத்த வேண்டிய சூழல் உருவானதால் ஊடகங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்ற அச்சம் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் பொலிவியா, கவுதமாலா மற்றும் ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதிகள் மற்றும் ஆர்மீனியா, ரஷ்யாவின் பிரதமர்களையும் கொரோனா தாக்கியிருந்தது. ஏற்கெனவே இருமுறை ஜி ஜின்பிங் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், தொடர்புகள் இன்றி இருந்தார். தற்போது அவர் சீனாவில் கொரோனா இல்லை என்பதை நிறுவ முகக்கவசம் இல்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.