119 ஆண்டுகளுக்கு பிறகு 2வது பெரிய வைரம் கண்டுபிடிப்பு.. விற்பனை செய்வது குறித்து விரைவில் முடிவு!

தென்னாப்பிரிக்கா நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வைரம்
வைரம்எக்ஸ் தளம்
Published on

ரஷ்யாவிற்கு அடுத்தப்படியாக வைரங்களை உற்பத்தி செய்வதில் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் போட்ஸ்வானா உள்ளது. இந்த நிலையில், போட்ஸ்வானாவில் 1905ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட வைரத்திற்குப் பிறகு, தற்போது 2,492 காரட் வைரம் வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, உலகின் 2வது பெரிய வைரமாக சொல்லப்படுகிறது. முன்னதாக, கடந்த 1905-ஆம் ஆண்டு இதே தென்னாப்பிரிக்காவில் 3,106 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரத்திற்குப் பெயரிடப்படவில்லை.

போட்ஸ்வானாவின் அதிபர் மொக்வீட்சி மசிசி, இந்த வைரக் கல்லை பார்வையிட்டார். இது உலகின் இரண்டாவது பெரியது என்பதை அவரது அரசாங்கம் உறுதி செய்தது. இந்த வைரத்தை மதிப்பிடுவது அல்லது எப்படி விற்கப்படும் என்பதை விரைவில் முடிவு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது பெரிய வைரங்களைக் கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்ட எக்ஸ்ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிக்க: “தோனியின் பெயரைச் சேர்க்காமல் தவறு செய்துவிட்டேன்” - வருத்தம் தெரிவித்த தினேஷ் கார்த்திக்!

வைரம்
கோஹினூர் வைரம் முதலில் யாரிடம் இருந்தது தெரியுமா? வைரம் உருவாக இத்தனை ஆண்டுகள் ஆகுமா? - ஓர் அலசல்!

இந்த வைரத்தைக் கண்டுபிடித்த கனடா சுரங்க நிறுவனமான Lucara Diamond Corp-இன் போட்ஸ்வானா நிர்வாக இயக்குநர் நசீம் லஹ்ரி, "இதைக் கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது, ஒரு வரலாற்று கண்டுபிடிப்பு” எனக் கூறியுள்ளார்.

லுகாரா தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வில்லியம் லாம்ப், "இந்த அசாதாரண 2,492 காரட் வைரத்தை மீட்டெடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2019-ஆம் ஆண்டில் கரோவே சுரங்கத்தில் 1,758 காரட் செவெலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரத்தை, பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் லூயிஸ் உய்ட்டன் வாங்கியது. ஆனால், அதன் விலை வெளியிடப்படவில்லை. 2016-ஆம் ஆண்டு இதே சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்பட்ட 1,109 காரட் வைரத்தை, 2017-ஆம் ஆண்டு கிராஃப் டைமண்ட்ஸின் தலைவரான லண்டன் நகைக்கடை அதிபர் லாரன்ஸ் கிராஃப் $53 மில்லியனுக்கு வாங்கியிருந்தார்.

”நிலத்தடியில் அதிக அழுத்தத்தின் கீழ் கார்பன் அணுக்கள் ஒன்றாக அழுத்தும்போது வைரங்கள் உருவாகின்றன. பெரும்பாலான வைரங்கள் குறைந்தபட்சம் ஒரு பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்றும் அவற்றில் சில 3 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை” என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதையும் படிக்க; உ.பி. அரசின் அதிரடி உத்தரவு.. ஒரு மாத சம்பளத்தை இழக்கும் 13 லட்சம் அரசு ஊழியர்கள்!

வைரம்
ஆந்திரா: விவசாய பெண் கூலித் தொழிலாளி கண்டெடுத்த வைரம் - ரூ.12 லட்சத்துக்கு வாங்கிய தொழிலதிபர்??

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com