நேற்று புன்னகை தினம் கொண்டாடப்பட்டதற்கு ஒரு நாள் தாமதமாக பிரியங்கா சோப்ரா இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா தனது வாழ்த்தில், எந்த ஒரு புன்னகையும் முக்கியமானது. இந்த ஒன்று அந்த ஒன்றுதான். உங்கள் எல்லோரையும் என் இதயத்திலிருந்து நான் உண்மையாக விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.
காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒருநாளை குறிப்பிட்டு கொண்டாடுவது புதிய கலாச்சாரமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. அந்த வரிசையில் அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளியை உலக புன்னகை தினமாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி நேற்று உலக புன்னகை தினம். 2018ம் ஆண்டில் அக்டோபர் 5ம் தேதியும் 2019ல் அடோபர் 4ம் தேதியும் புன்னகை தினம் கொண்டாடப்பட உள்ளது. இவ்வாறு தேதிகள் மாறினாலும் முதல் வெள்ளி என்பது இதற்கு மிக முக்கியம்.
இந்த நாளை ஹார்விபால் அறிமுகம் செய்து வைத்தார். அவர் அமெரிக்காவில் வணிக ரீதியான ஓவியர். இன்று சந்தையில் கிடைக்கும் ஸ்மைல் பந்தின் முகத்தை உருவாகியவர் இவர்தான். 1921ல் பிறந்த இவர் 2001ல் மறைந்தார். புன்னகை நாளை முன்னிட்டு ப்ரியங்கா சோப்ரா தனது வாழ்த்தை கொஞ்சம் தாமதமாக தெரிவித்துள்ளார்.