உலகின் மிகப்பெரிய டைனோசர் காலடித் தடங்கள் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஜுராசிக் பார்க் என்றழைக்கப்படும் வடக்கு ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பிரைஸ் பாயிண்ட் என்ற இடத்தில் இந்த காலடித் தடங்களை குயின்ஸ்லாந்து மற்றும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுமார் 5 அடி 9 அங்குல உயரம் கொண்ட காலடி தடம் ஒன்றினையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட காலடிதடங்களில் இதுவே மிகப்பெரியது என்று கூறப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கண்டறியப்பட்டுள்ள டைனோசர் காலடித் தடங்கள் 127 முதல் 140 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும், 21 வகையான டைனோசர் காலடித் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் குழு தெரிவித்துள்ளது.