மகிழ்ச்சியான நாடு: தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தில் பின்லாந்து! இந்தியாவுக்கு என்ன இடம்?

மகிழ்ச்சியான நாடு: தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தில் பின்லாந்து! இந்தியாவுக்கு என்ன இடம்?
மகிழ்ச்சியான நாடு: தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தில் பின்லாந்து! இந்தியாவுக்கு என்ன இடம்?
Published on

உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 5வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

உலக மகிழ்ச்சி தினம் வருடந்தோறும் மார்ச் 20 ஆம் தேதி கொண்டாடபட்டு வருகிறது. அதற்கு சில நாட்களுக்கு முன்னதாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி இன்று ஐநாவின் Sustainable Development Solutions Network இந்தாண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. தனிப்பட்ட நல்வாழ்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவுகள், ஆயுட்காலம் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்படுகிறது. இந்தாண்டு 150 நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கடந்தாண்டு 146 நாடுகள் மட்டுமே பட்டியல் இடம்பெற்றன.

இந்த பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 2வது இடத்தில் டென்மார்க், 3வது இடத்தில் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. 4 மற்றும் 5வது இடங்களில் முறையே சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து இடம்பெற்றுள்ளன. 2021 இல் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளில், ஆஸ்திரியா மட்டுமே வெளியேறியது. பட்டியலின் கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் மகிழ்ச்சியற்ற நாடாகவும், முறையே லெபனான், ஜிம்பாப்வே, ருவாண்டா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

இதற்கிடையில், இந்தியா தனது தரவரிசையில் ஒரு சிறிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, கடந்த வருடத்தில் 147 நாடுகளுக்கான பட்டியலில் 139 இடத்தில் இந்தியா இருந்தது. இந்த முறை மூன்று இடங்கள் முன்னேறி 136 வது இடத்தை பிடித்துள்ளது (இம்முறை 150 நாடுகள்) . தற்போது போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் முறையே 80 மற்றும் 98 வது இடத்தில் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com