நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதை படிப்படியாக நிறுத்திக்கொள்ள 40 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
ஸ்காட்லாந்தில் ஐநாவின் உலக காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடந்து வருகிறது. இதில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியை படிப்படியாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன. இதுதவிர 20க்கும் மேற்பட்ட நிதி சேவை அமைப்புகள் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க பணம் தரப் போவதில்லை என உறுதியளித்துள்ளன. காலநிலை மாற்றத்தால் உலகெங்கும் இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ளன.
மின் உற்பத்திக்காக நிலக்கரியை எரிக்கும்போது அதிலிருந்து வெளியாகும் கரியமில வாயு புவி வெப்பமயமாதலுக்கு காரணமாகி சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு காரணமாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியை படிப்படியாக கைவிட உலக நாடுகள் முடிவு செய்துள்ளன.