அமெரிக்காவின் மினசோட்டா பார்க் ரேபிட்ஸைச் சேர்ந்தவர் ஜோசப் கிரிசாமோர். இவர் தனது புதிய மொஹாக் மூலம் பழைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
மொஹாக் என்பது ஒருவித சிகையலங்காரம். ஜோசப் 42.5 இன்ச் அளவிற்கு தனது மொஹாக்கை வளர்த்தி 2021ஆம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனை பதிப்பில் இடம்பெற்றுள்ளார்.
1.08 மீட்டர் உயரமுள்ள இந்த நீளமான சிகையை வெகு தொலைவிலிருந்துகூட தெளிவாகக் காணலாம். மிகவும் அரிதாகக் காணப்படக்கூடிய ஒன்றாக இருப்பதால்தான் இந்த மொஹாக் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக ஜோசப் கூறுகிறார். மேலும் மக்கள் தன்னை பார்க்கும்விதம் விலைமதிப்பற்றதாக இருப்பதாகவும் கூறுகிறார். காரணம் அவர் உயரம், 6’1 அடி, இந்த சிகை அலங்காரம் மேலும் 4 அடியை உயர்த்திக் காட்டுவதாகவும் கூறுகிறார்.
2007ஆம் ஆண்டு சாதனையை முறியடிக்க விரும்பியதாகவும், முதலில் தலைமுடியின் இரண்டு ஓரங்களையும் ஷேவ் செய்வதற்கு பயந்ததாகவும் அவர் கூறுகிறார்.
சாதனை படைத்தவர்களின் பட்டியலில் தனது பெயரும் சேர்ந்திருப்பது பெருமை அளிப்பதாகவும், மேலும் எப்போதும் பண்புடன் நடந்துகொள்வதையே தன்னுடைய மனைவி விரும்புவதாகவும், ’மொஹாக் கிங்’காக, மிகவும் உயர்ந்த மொஹாக் ஸ்பைக் பட்டத்தைப் பெற முயற்சிப்பதாகவும் அவர் கூறுகிறார்.