உலகெங்கிலும் சுற்றுலா தினம் செப்டம்பர் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளை நட்பாக அணுகவும் அவர்களின் வாழ்வியல், உணவு, கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், கொள்கைகள் ஆகியவற்றைக் குறித்த புரிதல் ஏற்படுத்தவும் ஒவ்வொரு நாட்டின் அரசுகளுக்குச் சுற்றுலா துறையை மேம்படுத்துவது அவசியமாகிறது.
இவ்வாறு சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதால், உள்நாட்டில் இருக்கும் இயற்கை வளங்கள், கட்டிடக்கலைகள், ஓவியங்கள், விலங்குகள் ஆகியவை பேணி காக்கப்படும் போன்ற நன்மைகளும் விளைகிறது. கூடவே ஒரு நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்தால் அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும் வகையில் அமைவதால் உலக சுற்றுலா தினம் ஐ.நாவால் அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.
இந்த முறை உலக சுற்றுலா தின கொண்டாட்டங்கள் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளாக "சுற்றுலாவை மறுபரிசீலனை செய்தல் (Rethinking Tourism) " என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பொருளின் நோக்கம், கல்வி, வேலை வாய்ப்புகள் உட்பட நாட்டின் வளர்ச்சிக்கான நிலையான வாய்ப்புகள் உருவாகுவதில் சுற்றுலாவின் தாக்கம் ஏற்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
உலகம் சுற்றுவதை விட மேலான காதல் எது? என்ற ரேஞ்சுக்கு ட்ராவல் பற்றி சிலாகித்து பேசலாம்.. ஆனால் காசு இல்லையேப்பா.. என்பவர்களா நீங்கள்? ட்ராவல் செய்வதற்கு பணம் எப்படி சேமிப்பது என்ற எளிய வழிகாட்டல் இதோ..
Ø நல்ல பிளான் பண்ணி ட்ராவல் செய்ய நினைப்பவர்களுக்கு பணத்தைச் சேமிக்க ஒரு பெஸ்ட் சாய்ஸ் ஆர்.டி ( Recurring Deposit )தான். வட்டி குறைவு தான் என்றாலும் கூட ரிஸ்க் இல்லை.
Ø ஒரு வேளை உங்களது பட்ஜெட் சின்ன ரிஸ்க் எடுக்க அனுமதித்தால் , சிப் (SIP) தேர்வு செய்யலாம்.
Ø மியூச்சுவல் ஃபண்டுகளில் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் (ESF) என்று ஒரு வகை இருக்கிறது. ரிக்ஸ் அதிகம். ரிட்டன்ஸும் அதிகம். நிறைய அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைக்குப் பிறகு நல்ல வழிகாட்டல்களின் கீழ் ஈக்விட்டி சேவிங்ஸ் செய்தால் இதில் வரும் ரிட்டனஸ் உங்கள் ட்ராவல் கனவுகளுக்கு பக்கபலமாய் இருக்கும்.