Crop Tops அணிந்து பயணம்.. விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட 2 இளம்பெண்கள்.. இன்ஸ்டாவில் பதிவு!

Crop Tops அணிந்து இருந்ததற்காக இரண்டு பெண்கள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
தாரா கெஹிடி மற்றும் தெரேசா அரௌஜோ
தாரா கெஹிடி மற்றும் தெரேசா அரௌஜோx page
Published on

சமீபகாலமாக, உலகம் முழுவதும் விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிறுநீர் கழிக்கும் விவகாரம், அவசர கதவு திறப்பு, பாலியல் தொந்தரவு, ஊழியர்களைத் தாக்குதல், விமான இறக்கைகள் கீழே விழுவது, நடுவானில் விமானம் குலுங்குவது எனப் பல்வேறு சம்பவங்களும், விமானத்தில் ஏற்படும் கோளாறுகளும் அதற்கு உதாரணமாய் உள்ளன. அந்த வகையில், சமீபத்தில் Crop Tops அணிந்து இருந்ததற்காக இரண்டு பெண்கள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூ ஆர்லியன்ஸ் நோக்கி, கடந்த அக்டோபர் 4ஆம் தேதி புறப்பட்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் என்ற விமானத்தில் தாரா கெஹிடி மற்றும் தெரேசா அரௌஜோ என்ற 2 இளம்பெண்கள் பயணித்துள்ளனர். தோழிகளான இவர்கள், முதலில் குளிருக்கு இதம் அளிக்கும் வகையில் ஸ்வெட்டர் அணிந்துள்ளனர்.

பின்னர், விமானத்தில் ஏ.சி. செயல்பாட்டில் திருப்தி இல்லாத சூழலில் ஸ்வெட்டரை கழற்றியுள்ளனர். Crop Top அணிந்திருந்த அவர்களிடம், விமானத்தில் பணியாற்றிய ஆண் ஊழியர் ஒருவர், “வேறு ஏதேனும் ஆடைகளை மேலே அணிந்துகொள்ளுங்கள்” எனக் கூறியிருக்கிறார். அவ்விமானத்தில் இவ்வகை ஆடைகளை அணியக்கூடாது என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பதால், ஏன் இவர்கள் இப்படி சொல்கின்றார்கள் எனப் புரியாமல் இருந்துள்ளனர். இதனால் சற்று நேரம் கழித்து விமானத்தில் இருந்து இளம்பெண்கள் 2 பேரும் கீழே இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: ஹரியானா: காங். தோல்வி.. இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஜிலேபி.. ராகுலை விமர்சிக்கும் பாஜக.. ஏன் தெரியுமா?

தாரா கெஹிடி மற்றும் தெரேசா அரௌஜோ
அத்துமீறும் பயணிகளுக்கு 15 லட்சம் வரை அபராதம்: ஏர் இந்தியா அதிரடி

இதுபற்றி தெரசா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “ஆண் பணியாளர் ஒருவர் நாங்கள் அணிந்திருந்த ஆடையை பார்த்து, வேறு ஆடையை மேலே அணியும்படி கூறினார். விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும், நாங்கள் அணிந்த ஆடையில் எந்த தவறும் இல்லை என்றே கூறினர். எங்கள் ஆடைகளும், ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக இல்லை. ஆனால், அந்த ஆண் ஊழியர், எந்தக் காரணமுமின்றி எங்களை வெளியேற்ற விரும்பினார். சக பயணிகள் எங்களை பாதுகாக்க முயன்றனர். ஆனால், விமான கண்காணிப்பாளர் ஒருவர் வந்து, ‘விமானத்தில் இருந்து நீங்கள் இறங்கவில்லை எனில், போலீஸை கூப்பிட வேண்டியிருக்கும்’ என மிரட்டலாக கூறினார்.

வேறு விமானத்தில் இடம் வாங்கித் தரப்படும் என அவர் கூறினார். ஆனால், விமானத்தில் இருந்து கீழே இறங்கிய பின்னர், விமானம் இல்லை எனக் கூறிவிட்டார். கட்டணத் தொகையையும் திருப்பித் தரவில்லை. இதன்பின்னர், ஆயிரம் டாலர் செலவழித்து மற்றொரு விமானத்தில் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. ஆண் விமான பணியாளர் எங்களுடைய மேலாடைகளை விரும்பவில்லை என்பதற்காக நாங்கள் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டு இருக்கிறோம். எங்களை குற்றவாளிகள் போன்று நடத்திவிட்டனர் என்ற உணர்வே எங்களுக்கு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த அனைவரும் எங்களையே பார்த்தனர்” என்று பதிவிட்டுள்ளார்.

வைரலாகி வரும் இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். எனினும், விமான நிறுவன வலைதளத்தில், “எந்தவொரு பயணியின் ஆடையாவது, குறிப்பிட்ட முறையில் இல்லாமல் ஆபாசமாக இருந்தால்... அவர் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்படுவார்” என தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என தெரசா தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: “வினேஷ் போகத் எங்கு சென்றாலும்..” - தேர்தலில் வெற்றிபெற்றதை கடுமையாக விமர்சித்த பிரிஜ் பூஷன் சிங்!

தாரா கெஹிடி மற்றும் தெரேசா அரௌஜோ
சிறுநீர் கழித்த விவகாரத்தில் இவ்வளவு அலட்சியமா?..ஏர் இந்தியாவுக்கு அபராதம்-டிஜிசிஏ அதிரடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com