சிரியாவில் பெண்களுக்கு தொடரும் பாலியல் வன்கொடுமை

சிரியாவில் பெண்களுக்கு தொடரும் பாலியல் வன்கொடுமை
சிரியாவில் பெண்களுக்கு தொடரும் பாலியல் வன்கொடுமை
Published on

சிரியா கறை படிந்த வரலாற்றை தன்னுள் தாங்கிக்கொண்டு நிற்கிறது. சிரியா குறித்து வெளியாகும் செய்திகளும், புகைப்படங்களும் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. உண்ண உணவில்லை, இருக்க பாதுகாப்பான இடமில்லை... இருந்தும் ஏதோ நம்பிக்கையில் அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. யுத்த களத்தில் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் உயிரிழக்கின்றனர். சொந்த மண்ணில் வாழவும் முடியாமல் அகதிகளாக வெளியேறவும் முடியாமல் நடைப்பிணங்களாக பலர் தங்களின் வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

இதில் உதவிக்கரம் நீட்ட சென்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களும் தன்னால் முடிந்த இன்னல்களை அளித்து வருகின்றனர். அகதிகள் முகாம்களில் உள்ள பெண்கள் ஐ.நா.வில் இருந்து கிடைக்கும் உதவிக்காக பாலியல் சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக ஒரு ஆய்வு அறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி( United Nations Population Fund) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அமைப்பு கடந்த ஆண்டு பாலின அடிப்படையிலான வன்முறையை மதிப்பீடு செய்ததோடு, அகதிகள் முகாமில் உள்ள பெண்கள் ஐ.நாவில் இருந்து கிடைக்கும் உதவிக்காக பாலியல் சலுகைகள் வழங்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் கண்டறிந்து தெரிவித்துள்ளது.  ‘சிரியாவின் குரல்’ என்ற தலைப்பில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விதவைகள், விவாகரத்து செய்த பெண்கள், முகாம்களில் இருக்கும் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சில பெண்கள் ஐ.நா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் உள்நாட்டு அதிகாரிகளால் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தபடுகின்றனர். உதவிப் பொருள்கள் கிடைக்கும் பகுதிகள் பெரும்பாலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாக உள்ளதாகவும் அங்கு ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்பட்டுள்ளது. பொருட்களை விநியோகம் செய்ய வருபவர்களுக்கு அதிகமான பெண்களை வழங்கினால் உதவிப்பொருட்களை அதிகமாக கிடைக்கும் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.  .இல்லையென்றால் ஒரு நாள் இரவு பொழுதை அவர்களுடம் கழிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னரே ஐ.நா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக எச்சரித்தது,ஆனால் இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com