சீனா | அலங்கார பொம்மைகள் இல்லை... ரியல் பெண் மாடல்கள்தான்.. வைரலாகும் வீடியோ பதிவு!

சீனாவில் ட்ரெண்ட்மில் மேனிக்குயினுக்கு பதிலாக ஒரிஜினல் பெண் மாடல்களே ட்ரெட் மில்லில் நடந்து செல்வது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சீனா
சீனாமுகநூல்
Published on

சீனாவில் உள்ள துணிக்கடையின் வெளிப்புறத்தில், மேனிக்குயினுக்கு பதிலாக ஒரிஜினல் பெண் மாடல்களே ட்ரெட் மில்லில் நடந்து செல்வது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் உள்ள துணிக்கடைக்கு ஒன்றில் காணப்படும் காட்சிகள்தான் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக துணிக்கடைக்களுக்கு வெளியே புதுத்துணிகளின் வரவை வாடிக்கையாளர்களுக்கு காண்பிப்பதற்காக மேனிக்குயின்களுக்கு ( அலங்கார பொம்மைகள்) அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.. ஆனால், சீனாவில், மேனிக்குயின்களுக்கு மாறாக ,ரியல் பெண் மாடல்களே பொம்மைகளை போல ஆடைகளை அணிந்துக்கொண்டும், அங்கு வைக்கப்பட்டுள்ள ரெட்மில்லில் நடப்பதுமாக வைக்கப்பட்டுள்ளது..

பிரமிப்புடன் இதனை கண்டு செல்லும் மக்கள், வீடியோக்களாக பதிவு செய்து இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது தற்போது, 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக்கொண்டதாகவும் மாறியுள்ளது.

முன்னதாக , இதேப்போல துபாயில் உள்ள Dubai Festival City மால் ஒன்றிலும் , மேனிக்குயின் பொம்களுக்கு பதிலாக ரியல் மாடல்களே நிற்க வைக்கப்பட்டன..இதனைத்தொடர்ந்து தற்போது சீனாவிலும் இதேப் போல சம்பவம் நிகழ்ந்திருப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவர் தெரிவிக்கையில், “இப்படி செய்வதன் மூலம் , இதனை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு இந்த ஆடை பொறுந்தும் என்பதை புரிந்து கொள்ள உதவும் .” என்று தெரிவித்திருக்கிறார்..

சீனா
அமெரிக்க அரசுக்கே ஆலோசனை வழங்க இருக்கும் மஸ்க்.. ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இருப்பினும், வேறு சிலர் ”வியாபார நோக்கத்திற்காக இப்படி செய்வது எவ்வாறு சரியானதாகும். ஆனால், எத்தனை மணி நேரம் பொம்பைகளை போல இவர்கள் இதை செய்வார்கள்.. இது ஒருவகையான பணிசுமையை அவர்களுக்கு உண்டாக்கும்.” என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com