`நல்லவேளை நாங்க அதை சாப்பிடல’- `பர்கர் கிங்’ நிறுவனத்தின் சிக்கன் பர்கரில் மரப்பென்சில்!

`நல்லவேளை நாங்க அதை சாப்பிடல’- `பர்கர் கிங்’ நிறுவனத்தின் சிக்கன் பர்கரில் மரப்பென்சில்!
`நல்லவேளை நாங்க அதை சாப்பிடல’- `பர்கர் கிங்’ நிறுவனத்தின் சிக்கன் பர்கரில் மரப்பென்சில்!
Published on

பர்கர் கிங் உணவகத்தில் சாப்பாடு ஆர்டர் செய்திருந்த பெண்ணுக்கு, உணவுடன் பென்சில் ஒன்று டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரிடம், பர்கர் கிங் தரப்பில் `கவலைப்படாதீர்கள். அது சாதாரண க்ரீஸ் பென்சில்தான்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லியேன் என்ற அந்தப் பெண் கடந்த திங்கட்கிழமை பர்கர் கிங் நிறுவனத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். சிக்கன் ராயல் என்ற (chicken royale) பர்கரை அவர் ஆர்டர் செய்துள்ளார். அவர் அதை சாப்பிட கடித்தபோது, பர்கரின் உள்ளே ஏதோ இருப்பதை உணர்ந்து, உணவை துப்பியிருக்கிறார். அப்போதுதான் பர்கரின் உள்ளே மரப்பென்சில் ஒன்று இருந்தைதை அறிந்திருக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அவர் உணவு ஆர்டர் செய்த கடைக்கு ஃபோன் செய்து பேசியுள்ளார்.

அந்த பென்சில், பார்ப்பதற்கு பெண்கள் கண்களுக்கு பயன்படுத்தும் ஐ-லைனர் போல இருந்ததால், அது ஐ-லைனரா என்று கேட்டுள்ளார். அவருக்கு பதிலளித்த பெண் ஊழியர், “நீங்கள் கவலைபடாதீர்கள். அது, பர்கர் ரேப்பர்ஸை குறித்து வைப்பதற்காக பயன்படுத்தும் சாதாரண கிரீஸ் பென்சில்தான். இங்குள்ள ஒரே பெண் ஊழியர் நான் தான். ஆகவே நிச்சயமாக உங்கள் உணவிலிருந்தது ஐ-லைனர் இல்லையென்று என்னால் கூறமுடியும்” என்றுள்ளார். இதைக்கேட்ட அப்பெண் கோபமடைந்து, `எனக்கு உடனடியாக என் பணத்தை ஆன்லைனில் திருப்பிகொடுங்கள்’ எனக்கூறிவிட்டு தொடர்பை துண்டித்திருக்கிறார்.

பின் இதுகுறித்து Liverpool Echo என்ற ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த அப்பெண், “அது என்ன பென்சிலாக வேண்டுமானால் இருக்கட்டும். எப்படி இருந்தாலும், அது சாப்பிட உகந்த பொருள் இல்லைதானே... பின் ஏன் அதை உணவில் வைத்தார்கள்? இது தவறு என்று தெரிந்தும்கூட, அப்பெண் ஊழியர் அச்செயலுக்காக என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. நான் முதலில் அதை ஐ-லைனர் என்றே நினைத்தேன்.

`மேக்கப் செய்துகொண்டே யாரோ பர்கர் தயாரித்திருப்பார்கள் போல'-என்று நினைத்தேன். பென்சில் போல இன்னும் எதையெல்லாம் உணவில் வைத்தார்களோ என்றே அதிகம் பயந்தேன். அதனால் அந்த உணவை நானும் என் மகன்களும் சாப்பிடவில்லை” என்றுள்ளார்.

இறுதியாக அப்பெண் செலுத்திய பணத்தை பர்கர் கிங் நிறுவனத்தினர் ரீ-ஃபண்ட் செய்துள்ளனர். மேலும் தங்கள் தரப்பிலிருந்து அவரிடம் மன்னிப்பு கோரி, இச்சம்பவம் குறித்து விசாரணை செய்வதாகவும் தெரிவித்திருக்கின்றனர். தங்கள் ஊழியர்களுக்கு, வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என சொல்லித்தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com