அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர், ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துக் கொண்டிரு்தார். அப்போது அருகிலுள்ள காபி போன்ற பானத்தை கோப்பையில் வைத்திருந்த பெண் ஆவேசமாக ஓடிவந்து அவரது முகத்தில் ஊற்றிவிட்டு வெளியேறிவிட்டார். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டப்ளின் நகரில் உள்ள மெரியான் சதுக்கத்தில் துணை பிரதமர் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அந்த அசம்பாவிதம் நடந்தது. ஜூன் மாதம் வரையில் அயர்லாந்து பிரதமர் பொறுப்பை அவர் கவனித்துவந்தார். பின்னர் அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
துணைப் பிரதமர் மீது அந்தப் பெண் பானத்தை ஊற்றியதற்கான காரணம் அறியப்படவில்லை. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.